Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இணையவழி கற்கையை தொடராக மேற்கொள்வது சாதனையே - கோட்டக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்!!


நூருல் ஹுதா உமர்

கல்வித் துறையில் இதனை ஒரு சாதனை என்றுதான் கூறவேண்டும். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தினால் (தேசிய பாடசாலை) ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக இணையதள கற்கைகளை மேற்கொள்கின்றமை வரவேற்புக்குரியது என சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்தம்பி தெரிவித்தார்.

‘கொவிட் 19’ தொற்றினால் உலகமே வியந்து, பீதியிலுள்ள காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை கொண்டு கல்வி அமைச்சினால் பணிப்புவிடுக்கப்பட்ட கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அமைவாக இணையவழி கற்கையினை சம்மாந்துறை தேசிய பாடசாலை தொடராக ஒரு மாத காலமாக இவ்வாறான இணையவழி கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு ஊக்கம் கொடுத்து, தலைமைதாங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில், பாடசாலை ஆசிரியர் குழாம், இணையவழியில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, இதனை நேர்த்தியாக வடிவமைத்து வழங்குகின்ற இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் குழுவினரையும் வாழ்த்துவதோடு, இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள வலயக் கல்வி பணிப்பாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் - என்றார்.

Post a Comment

0 Comments