Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு- குருக்கள்மடத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் வெள்ளக் கட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளில் தந்தையான செட்டிபாளையத்தைச் சேர்ந்த 59 வயதையுடைய செம்பாப்போடி தேசியசிங்கம் என்பவரே நேற்று (08) வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்ததுடன், நேற்று மாலை குருக்கள்மடம் வெள்ளக் கட்டுப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி குறித்த இறப்பு நிகழ்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசேதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments