Home » » ஸ்ரீலங்காவில் இன்று தீவிரமடையும் வெப்பநிலை : விடுக்கப்பட்டது எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் இன்று தீவிரமடையும் வெப்பநிலை : விடுக்கப்பட்டது எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் வெப்பநிலையில் இன்று தீவிரமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி 32செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் அளவான சுட்டெண் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வானிமை மையம் எச்சரித்துள்ளது.
கிழக்குமாகாணம், வடமேல், வடமத்திய, மேல் மற்றும் தென்மாகாணத்தின் சில இடங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த வெப்ப அதிகரிப்பு சுட்டெண் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பகல் ஆரம்பித்த இந்த வெப்பநிலை இன்று வரை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்தும் வெப்பநிலையில் பணியாற்றுபவர்களுக்கு வெப்பஅழுத்தம் உட்பட்ட தாக்கங்கள் ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அவதானமாக இருக்குமாறும், போதியளவு நீரை பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |