கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவந்தது.
தற்போதுவரை 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், இரவு 8 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 6 ஆம் திகதிவரை முன்னர் போன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளது.
அந்த மாவட்டங்களில் எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments