குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும் 31 வயதான பழனிவேல் கலைச்செல்வி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் தொடர்பில் தெரியவருகையில்,
குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன வருதத்திற்கு உள்ளான மனைவி இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு 10 மற்றும் 5 வயதான ஆண் பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனைகள் இன்று பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவரான 40 வயதான எல்.லோகநாதன் என்பவர் 112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: