இரவு வெளியான மருத்துவ அறிக்கையின்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொகை அதிகித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்காவில் இதுவரை காணப்பட்ட நோயாளிகளில் 14 பேர் போதைப்பொருளுடன் தொடர்புடைய நோயாளிகள் என இனம் காணப்பட்டுள்ளது.
ஜா எல - சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு போதைப் பொருள்பாவனை நபரால், கிராண்பாஸ் - நாகலகம் வீதி, குணசிங்கபுர மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்ததாவும், அப்பகுதிகளில் கொரோனா பரவியமையானது ஒரு கொத்தணி பரவல் சம்பவமாக கண்டறியப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து கொரோனா தொற்றாளர்களும் 31 கொத்தணிகள் ஊடாகவே பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளது. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டதாக பொலிஸ் சட்ட பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எனவே யாரென்று அறியாத ஒருவர், உங்கள் குடியிருப்புத் தொகுதியிலோ, தோட்டப் பகுதியிலோ உள் நுழைந்தால், அல்லது தங்கி இருந்தால் , அது குறித்து அருகே உள்ள பொலிஸ் நிலையத்துக்கு, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்.
அவ்வாறு அப்பகுதியுடன் தொடர்பற்ற எவருக்கேனும் தங்குமிடம் வழங்கினால், அதனை வழங்கும் வீட்டு உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ' என தெரிவித்தார்.
0 comments: