Advertisement

Responsive Advertisement

கொள்ளளவையும் மீறி அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் -திணறும் அங்கொடை வைத்தியசாலை

ஸ்ரீலங்காவில் அண்மைய சில தினங்களாக வேகமாக பரவி வரும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை நிரம்பி வழிவதாக வைத்தியசாலையின் உடற் கூற்று விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளர்களால் அந்த வைத்தியசாலையின் கொள்ளளவையும் மிஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 120 கொரோனா தொற்றாளர்களுக்கே சிகிச்சையளிக்க முடியும். அதற்காகவே பூரண வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் புதிதாக எவரேனும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந் நிலைமையை சீர் செய்ய, தற்போதும் வைரஸ் இல்லை என தெரியவந்தும் மேலதிக இறுதி பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் தொற்றாளர்கள் பலர் அங்கு தங்கியுள்ளனர்.

அவர்களை வேறு வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றுவதன் ஊடாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் புதிய தொற்றாளர்களை அனுமதிக்கலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments