Home » » உலக நாடுகளை முட்டாளாக்கிய சீனா! தற்போது வெளியான தகவல்களால் அதிர்ந்த உலக நாடுகள்

உலக நாடுகளை முட்டாளாக்கிய சீனா! தற்போது வெளியான தகவல்களால் அதிர்ந்த உலக நாடுகள்


உலக நாடுகள் பலவற்றை சீன அரசாங்கம் திட்டமிட்டே ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது.

இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த தரவுகள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.


சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 82,933 என்றே உத்தியோகப்பூர்வ கணக்குகள் வெளியிடப்பட்டன.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு தரவில்,

சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி தொடக்கத்தில் மற்றும் ஏப்ரல் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சீனாவில் மொத்தம் 640,000 பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளானது சீனாவில் ஹொட்டல்கள், மருத்துவமனைகள், பிரபல சங்கிலி உணவு விடுதிகள் என விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பல தடவைகள் அமெரிக்கா கொரோனா தொடர்பிலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் சீனா பொய் சொல்லுகிறது என்றும், உண்மையான தகவல்களை அவர்கள் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது தொடர்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய போது, உண்மையில், சீனா எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று கடுமையான பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |