Advertisement

Responsive Advertisement

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை நெருங்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில், அமெரிக்கா சதித்திட்டங்களையும், பொய்களையும் பரப்புவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்களை தூண்டுவதாகவும் சீன குற்றம் சுமத்தியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஹி நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.சீனாவை மீண்டும் மீண்டும் தாக்குவதற்கு கட்டாயப்படுத்தும் அரசியல் வைரஸினால் அமெரிக்கா பாதரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்க நிலைக்கு பதிலளிக்கும் விதமாக நேரத்தை வீண் விரயமாக்குவதையும், விலைமதிப்பற்ற உயிர்கள் வீணாவதையும் நிறுத்த வேண்டும்.

வைரஸ் தொற்று கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டதிலிருந்து, உலகளாவிய பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட்டதாக சீனாவின் கூற்றை அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 974 ஆக உள்ளது.

மரண எண்ணிக்கை 4 ஆயிரத்து 634 ஆக உள்ளது.

அமெரிக்காவில், கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 85 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரை 54 இலட்சத்து 92 ஆயிரத்து 801 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களுள், 3 இலட்சத்து 45 ஆயிரத்து 416 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

22 இலட்சத்து 99 ஆயிரத்து 345 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments