விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிவரும் பொலிஸ் உயர் அதிகாரி தொடக்கம் சாதாரன பொலிஸ் உத்தியோகத்தர் வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்லடி காவல்துறை பயிற்சி முகாமில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
தமது விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று மீண்டும் கடமைக்கு திரும்பிய நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments