அம்பலமானது சுமந்திரனின்
வெற்றிக்கான திருத்திட்டம்
பகுதி:02- சுமந்திரன், ரட்ணஜீவன் ஹுல் இடையே 'டீல்'
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் வெற்றியை உறுதி செய்யுமிடத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை பெற்றுத்தருவதென்ற 'டீல்' நிறைவுக்கு வந்திருக்கின்றது.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுமந்திரனை வெற்றிபெற வைப்பதற்காக ரட்ணஜீவன் ஹுலும், உதவித்தேர்தல் ஆணையாளர் சி.அச்சுதனும் கூட்டிணைந்து சதிவலை பின்னியிருந்ததை முன்னைய பதிவில் தந்திருந்தோம்.
இந்தப் பின்னணியில், சுமந்திரனின் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் ஹுலுக்கு பிரதியுபகாரம் செய்வதற்கான 'டீலை' நிறைவுக்கு கொண்டுவந்திருக்கின்றார்.
அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக ஹுலுக்கு தேசிப்பட்டியல் எம்.பி பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவின் மனப்பூர்வமான சம்மதத்தினை பெற்றிருக்கின்றாராம்.
பொருத்துவீட்டுத்திட்டத்தில் சுமந்திரனுடன் முட்டிமோதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தமிழ் உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதனை இம்முறை கட்சியிலிருந்து முழுமையாக கடாசிவிடுவதற்கான 'உள்' குத்தை ரணிலுக்கு செய்த சுமந்திரன் அதற்கு மாற்றீடு யார் என்று ரணில் வினவியபோது ஹுலின் பெயரை முன்மொழிந்திருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவும், தமிழர்களையும், போராட்டங்களையும் விமர்சிக்கவல்லவரும், அமெரிக்கா உட்பட மேற்குலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவருமாக ரட்ணஜீவன் ஹுலை இணைத்துக்கொண்டால் 'நன்மைகள் பல' என்று கணக்குப்போட்டு சம்மதத்தினை வெளியிட்டிருக்கின்றாராம்.
அண்மைக்காலமாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் என்பதை மறந்து ஹுலின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அரசியலமைப்புச் சபையில் முறையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருட்டுத்திட்ட அம்பலபடுத்தல்கள் தொடரும்,

0 Comments