Advertisement

Responsive Advertisement

குவைத்திலிருந்து நாடு திரும்பி திருகோணமலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பயாகலையைச் சேர்ந்த குறித்த பெண் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் முடிவிலேயே மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments