Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவில் இறந்தவரை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமாக உயிரிழந்த மூன்றாவது நபரை தமது பிரதேசத்தில் அடக்கம் செய்வதை பிரதேச மக்கள் எதிர்த்துள்ளனர்.
இந்த சடலத்தை தனிமைப்படுத்தும் விதிமுறைகளுக்கு அமைய முல்லேரியா உடுமுல்ல மயானத்தில் சுகாதார அதிகாரிகள் அடக்கம் செய்யவிருந்தனர்.
எனினும் உடுமுல்ல மற்றும் கொட்டிகாவத்தை மயானங்களில் சடலத்தை அடக்கம் செய்வதை எதிர்த்து பிரதேசவாசிகள் மயான நுழைவாயில்களுக்கு பூட்டு போட்டு மூடியிருந்தனர். இதனால் சுகாதார துறையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இறுதி சடங்குகள் நடத்திய பின்னர் எந்த வகையிலும் வைரஸ் பரவாது என சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments