Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானியாவில் இன்றும் நாளைம் மிகவும் ஆபத்து: வெளியே நடமாட வேண்டாம்! அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வார விடுமுறை நாட்களில் கொறோனா தொற்று அதிகமாக பரவும் சாத்தியம் காணப்படுவதால் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ள பிரித்தானியாவின் சுகாதாரத்துறைச் செயலாளர் Matt Hancock இந்த வார விடுமுறை நாட்களில் காலநிலை மக்களை வெளியே நடமாடத் துண்டும்படியாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை 18 டிகிரி வெப்பநிலை காணப்படுவதுடன் காலநிலை சீரானதாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே நடமாடச் சந்தர்ப்பம் இருக்கின்றது.
இது கொறோனா தொற்று அதிகம் பரவி உயிரிழப்புக்கள் அதிகமாகக் காரணமாகிவிடும்.
எனவே மக்கள் கூடுமானவரையில் இந்த வார விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரித்தானியில் அரசாங்கம் எதிர்பார்த்ததை விட கொறோனா தொற்று மிக அதிகமாகப் பரவி வருவதால், உயிரிழப்புக்களை நாம் குறைக்கவேண்டுமானால் வீடுகளில் தங்கியிருப்பதே ஒரு வழி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொறோனா தொற்று காரணமாக இதுரை பிரித்தானியாவில் மொத்தம் 3605 பேர் இறந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 684 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments