Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா ஆண்களை மட்டும் அதிகம் பலியெடுப்பது ஏன்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று ஆய்வின் முடிவுகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது
குறிப்பாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையின் கணக்கின்படி பார்த்தால் 71% ஆண்கள்தான் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்றும் 29% தான் பெண்கள் பலியாகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் அதிகம் ஆண்களை தாக்குவதற்கு என்ன காரணம் என்று இந்த ஆய்வு முடிவின்படி பார்த்தபோது பெண்களைவிட ஆண்களுக்கு புகைப் பழக்கம், மதுப் பழக்கம் ஆகியவை அதிகமாக இருப்பதும் ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் பெண்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் இருப்பதாகவும் ஆண்கள் வெளியே சென்று வருவதாகவும் அது மட்டுமின்றி சமூக விலகலையும் அவர்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறுவது, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பது, புகை, மது பழக்கங்களுக்கு அடிமையாவது, தேவையில்லாத காரியங்களுக்கு வெளியே செல்வது ஆகியவையே ஆண்கள் அதிகமாக கொரோனாவுக்கு பலியாக காரணம் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments