Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு பண்டாரநயக்க மாவத்தையில் அதிகளவில் கொரோனா பரவியது எவ்வாறு? சுகாதாரப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இதுவரை 62 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அந்த பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றிலிருந்தே தொற்று பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரொனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவரின் சிகை அலங்கரிப்பு நிலையத்தில், சிகை அலங்காரம் செய்த 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments