Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொடிய கொரோனாவை குணப்படுத்த கடலட்டையின் இரத்தம்! கிடைத்த அங்கீகாரம்

கொாரோனா வைரஸை கடல் அட்டையின் இரத்தத்தின் மூலம் குணப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் தினம் தினம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
சீனாவில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இத்தாலி அமெரிக்கா பிரான்ஸ் பிரித்தானியா ஸ்பெயின் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்து வருகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் இரட்டிப்பாகிக்கொண்டு செல்லும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் கடலட்டையின் இரத்தம் கொரோனா நோளிகளிற்கான புதிய மருந்தாகப் பாவிக்கப்பட உள்ளது.
கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒக்சிஜனின் அளவு பெருமளவு குறைவதால் சாவு ஏற்படுகின்றது. இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.
மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்கும் ஒக்சிஜனின் அளவை விட நாற்பது மடங்கு ஒக்சிஜனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது.
மனித உடலில் இந்த இரத்தம் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM, மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP ஆகியவை அங்கீகரித்துள்ளன.

Post a Comment

0 Comments