Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இத்தாலியிலிருந்து இளைஞர் ஒரு விடுத்துள்ள அவரச கோரிக்கை!

இத்தாலியில் உள்ள சுற்றுலாக் கப்பலில் பணிபுரியும் இலங்கை இளைஞர் ஒருவர் தன்னை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
200 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறுகின்றன.
உலகளவில் 65000 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி பெரும் இழப்பிற்கு முகம் கொடுத்துவருகின்றது.
இந்நிலையில் இத்தாலியில் உள்ள சுற்றுலாக் கப்பலில் பணிபுரியும் இல்கை இளைஞர் ஒருவர் தன்னை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு சொந்தமான குறித்த கப்பல் நாளை (6) இலங்கை நோக்கி வரவுள்ளது.
இது தொடர்பில் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குறித்த இளைஞன், மேற்படி கப்பலானது கொழும்பு துறைமுகத்திற்கு வரும்போது தன்னை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments