Home » » அதிகாரி மீது கத்தி குத்து! பொலிஸில் சிக்கிய 16 வயதுச் சிறுவன்

அதிகாரி மீது கத்தி குத்து! பொலிஸில் சிக்கிய 16 வயதுச் சிறுவன்

ம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ரம்புக்கணை, பொதுச் சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது குறித்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி காட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரது பணிக்கு இடையூறு விளைவித்து, அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததோடு, அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய, நேற்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் ரம்புக்கணை பொலிஸ் பிரிவிலுள்ள ஹீனாபோவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கடிகமுவவில் வசிக்கும் 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள்ளார்.
சந்தேகநபர், இன்றையதினம் (06) மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |