Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இளைஞரின் திடீர் மரணம் -கிராமத்துக்கு ஏற்பட்டநிலை


இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து கேகாலை மாவட்டத்தில் உள்ள திப்பிட்ய, அரநாயக்கா பிரதேசத்தில் இன்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது..

இன்றைய தினம்யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களைத் தவிர 19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

எனினும் கேகாலை மாவட்டத்தில் உள்ள திப்பிட்ய, அரநாயக்கா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (05.4.2020) இளைஞர் ஒருவர் திடீரென மரணமநை்துள்ளார்.

இதனையடுத்து அரநாயக்கா பொலிஸர் ,அப்பிரதேசத்தில் இன்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்படாதென நள்ளிரவு வேளையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வைத்திய அறிக்கை வரும் வரை மேற்படி பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments