Home » » ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் நகரங்களில் குவிந்த மக்கள்..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் நகரங்களில் குவிந்த மக்கள்..


ஏப்ரல் முதலாம் திகதி பிற்பகல் 2 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால் அண்மைய நாட்களை விடவும் இன்றைய தினம் சனக் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.
பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும், ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
குறிப்பாக தலவாக்கலை நகரில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணும் வகையில் மக்கள் நிற்கவேண்டிய இடங்கள்குறித்தொகுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிறத்தில் அடையாளம் இட்டுக் காட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையைவிடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
8 மணிநேரமே ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றன.








கந்தளாயில்
கடந்த நான்கு தினங்களாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக இன்று(6)திருகோணமலை பொதுச் சந்தையில் மக்கள் முக கவசம் அணிந்து தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இருந்தபோதிலும் சுகாதாரத்தை பேணுமாறு பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் இராணுவத்தினரும் மக்களை தெளிவுபடுத்தியதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
பொது மக்கள் வங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் சம இடைவெளியை பேணியதையும் காணக்கூடியதாக இருந்தது.
கந்தளாய் நகர பகுதிகளில் காலையிலிருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.



மட்டக்களப்பில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் பெருமளவான பொதுமக்கள் இன்று காலை முதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
பல்பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று பொருட்களை கொள்வனவு செய்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுச்சந்தை வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்,ஊரணி பூங்கா,சின்ன ஊறணி பாடசாலை விளையாட்டு மைதானம்,சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானம் ஆகியன பொதுச்சந்தைகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதைகாணமுடிந்தது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைசெய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டுமே திறக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் சிலர் அத்தியாவசியமல்லாத பொருட்கள் விற்பனை நிலையங்கள்திறக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் நேரடியாகசென்று குறித்த வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தார்.
இன்றைய தினம் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும்குவிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டன.




வவுனியாவில்
ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் அதிக மக்கள் குவிந்திருந்தனர்.
இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள், எரிபொருள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.
வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சனநெரிசல் நிலமைகளை கட்டுப்படுத்தியதுடன், வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்தியாலயம், வவுனியா கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.




மன்னாரில்
மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்துக் கொண்டனர்.
பல் பொருள் விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
குறிப்பாக மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் தற்காலிகமாக மரக்கறிவிற்பனை இடம் பெற்று வந்தது.
மக்கள் இலட்சியப் போக்குடன் சமூதாய இடை வெளி இன்றி முகக்கவசம் அணியாமல் பொருட்களை கொள்வனவு செய்தனர். அவ்வாறு செயற்பட்டவர்களை பொலிஸார் எச்சரித்ததோடு, முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தினர்.
மேலும் மன்னார் நகர் முழுவதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |