Advertisement

Responsive Advertisement

மீண்டும் சீனாவிற்குள் கொரோனா! உறுதிப்படுத்திய அதிகாரிகள்

சீனாவில் மீண்டும் புதிதாக 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்நிலையில், அங்கு தற்போது வரை 82,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,341 பேர் பலியாகினர்.
எனினும் கடந்த மாதம் மெல்லக் குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தினையடுத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது சீனா.
அதேவேளை, உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதனால் தற்போது பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும் சீனாவிற்குள் கொரோனா தொற்று குறைவடைந்ததையடுத்து பொது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் மீண்டும் புதிதாக 108 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
“சீனாவில் கடந்த வாரத்தில் மட்டும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் வெளிநாட்டிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள். ஹுபே மாகாணத்தில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும், முன்னரைப்போன்ற பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments