Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீட்டில் இருந்து வேலை செய்யும் கால எல்லையை நீடித்தது அரசாங்கம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லையை அரசாங்கம் நீடித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்களை வீட்டிலேயே முடங்கி இருக்குமாறும் வீட்டிலிருந்து பணி புரியுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வீட்டிலிருந்து பணி புரியும் கால எல்லையை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 210 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments