Home » » பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!


கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள் மீண்டும் திறக்கும் திகதிகள் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய 10164 அரசாங்க பாடசாலைகள் மே மாதம் 11ஆம் திகதி திறக்கப்படவிருந்தன. எனினும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அதனை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எச்.சித்ரானந்த,
“மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மேலும் தாமதமாகுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. நாட்டின் நிலைமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் உறுதியாக மாற்றம் ஏற்படுமா இல்லையா என்பதனை தற்போதே அறிவிக்க முடியாது.
ஆபத்தான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டால் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை மாகாண அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு தாமதமாகலாம்.
எனினும் அதனை தயாரிக்கும் நடவடிக்கை இந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மே மாதம் 4ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்படும்.
பல்கலைக்கழகங்களை மீளவும் ஆரம்பிக்கும் திகதி சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஆலோசனைகளுக்கமைய மாற்றமடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |