Home » » நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் எப்போது நீக்கப்படும்? - பிரதி பொலிஸ் மா அதிபர்

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் எப்போது நீக்கப்படும்? - பிரதி பொலிஸ் மா அதிபர்


இலங்கை முழுவதும் இன்றும் நாளையும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 4 மாவட்டங்கள் மற்றும் சில பொலிஸ் பிரிவை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.
எனினும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்கி மக்கள் வாழ்க்கையை வழமைக்கு திரும்புவது எப்போது என பலர் கேள்வி எழுப்புகின்றார்கள். எனினும் ஒரு சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவதனால் முழு நாட்டிற்கே ஆபத்தாகி விடும்.
பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டமையினால் கடற்படை சிப்பாய்கள் உட்பட கொழும்பு 12 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |