Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாளை ஊரடங்கு தளர்த்தவுள்ள நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் தொற்று நீக்கி விசிறும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படும் நிலையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இடம்பெற்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச பாடசாலைகள், வங்கிகள், பொதுச் சந்தை கட்டடத் தொகுதிகள், அரச அலுவலகங்கள் உட்பட்ட பல பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார பரிசோதகர்கள், தெளிகருதி இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் பாதுகாப்பில் அதிக கரிசனை காட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments