ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அதே போல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த கண்டத்தில் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள வடபிராந்திய பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலம் மற்றும் , சீனாவுக்கு சென்று வந்தவர்களாலும் வைரஸ் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வடக்கு பிராந்தியத்தில் உள்ள 10 நகரங்களுக்கு சீல் வைத்து பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சில நாட்களில் இத்தாலி முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.
வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பயன் அளிக்கவில்லை. அங்கு கொத்து கொத்தாக மக்கள் பலியானார்கள். அதன்பின் மற்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தை காட்ட தொடங்கியது.
சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது உச்சத்தில் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
தற்போது இத்தாலி, ஸ்பெயினில் தினமும் பலியாகுபவர்கள், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேவேளையில் இங்கிலாந்து, பிரான்சில் பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
இதே போல் மற்ற நாடுகளிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
0 comments: