Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தளர்வையடுத்து மதுபானசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, மதுபானசாலைகளும் மூடப்பட்டன.
நாட்டின் சில மாவட்டங்களில் ஏற்கனவே ஊரங்கு சட்டம் பல்வேறு தடைவைகள் தளர்த்தப்பட்ட போதிலும், மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஊரங்கு சட்டத்தை பகுதியளவில் தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மதுபானசாலைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தருகின்ற நபர்கள், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், சமூக இடைவெளியே பேண வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments