Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அவசியமற்ற தேவைகளுக்காக எவரும் வீதிகளுக்கு வரக்கூடாது: இராணுவ தளபதி

197 பேர் நேற்றும், நேற்று முன்தினமும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தொழில் மற்றும் அத்தியவசிய சேவைகளுக்காக செல்லும் நபர்களுக்கு மாத்திரமே நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் எனவும், இதனால் ஏனைய அனைவரும் வீடுகளில் இருந்து அத்தியவசியமற்ற நடவடிக்கைகளுக்காக வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக தொழில் மற்றும் வேறு தேவைகளுக்காக வந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் சிக்கியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் இவர்களுக்கு தமது ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments