Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தர பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட செய்தி

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கையில் இறுதி கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்பதுடன், தற்காலிகமான பெறுபேற்று பத்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் சுகாதார நடைமுறையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
எனவே, குறித்த பெறுபேறுகளை இணையத்தளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments