Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரீலங்காவில் நடந்த வினோதம் : கொரோனாவின் பிடியிலிருந்து 5 நாட்களில் மீண்ட மீன் வர்த்தகர்

பிலியந்தலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மீன் வர்த்தகர் வெறும் 5 நாட்களில் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
5 நாள் சிகிச்சையில் குணமடைந்த அவர், இலங்கையில் கொரோனாவினால் விரைவாக குணமடைந்தவராக கருதப்படுகிறார்.
கடந்த 20ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அங்கொடை தொற்றுநோயியல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்படாததுடன், விரைவில் குணமடைய முடிந்ததாகவும் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக எல்லாவெல தெரிவித்தார்.

மேலும், அவர் 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.
குறித்த மீன் வர்த்தகர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டு, அங்கிருந்த வர்த்தகர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments