Home » » கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் தொலைபேசி இலகங்ககள் அறிமுகம்!

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் தொலைபேசி இலகங்ககள் அறிமுகம்!

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் கொரோனா
தொற்று நோய் கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை முன்னெடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தெரிவித்தார்.
தொற்றா நோய்களுக்கான கிளினிக் நோயளிகளின் மருந்துகளை அவர்களின் வீட்டிக்கே கொண்டு செல்லும் முகமாக பொதுமக்களுக்கு தொலைபேசி இலங்கங்கள் அறிமுகப்படுத்தும் மற்றும் வைத்தியசாலைக்களுக்கு தொலைபேசிகள் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது .
இதன் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை சேவை 35க்கு அதிகமான தொலைபேசி இலகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் போது மருத்துவ ஆலோசனைகள் கிளினிக் வசதியை ஏற்படுத்தும் முகமாக இச்சேவை வழங்கப்படுகின்றது. வீடுகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லும் முகமாக எங்களது உத்தியோகதர்கள் உங்கள் காலடிக்கு வந்து இச்சேவையினை முன்னெடுப்பார்கள்.
பொத்துவில் திருக்கோவில் நிந்தவூர் சம்மாந்துறை வைத்தியசாலை உட்பட சுகாதார பணிமனை சேவை பகுதிக்குட்பட்ட 15வைத்தியசாலைகளுக்கும் 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு இவ் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளோம். இங்கு வழங்கிய தொலைபேசி இலக்கம் மூலம் உங்கள் பிராந்தியங்களில் காணப்படுகின்ற வைத்தியசாலைகள் மூலம் பொதுமக்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் சேவை பெறுவோர் சரியான முகவரியை வழங்க வேண்டும் அப்போது தான் எமது சேவையை இலகுவாக வழங்க முடியும் . இங்கு வழங்கிய தொலைபேசி இலக்கங்கள் பிஸியாக காணப்பட்டால் குறித்த இலக்கங்களின் வட்ஸ்அப், வைபர் குறுந்தகவல் வழங்க முடியும். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் மற்றும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் வசித்தால் நீங்கள் எமது தொலைபேசி இலக்கம் அல்லது எமது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
மேலும் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் கருத்து தெரிவிக்கையில்,
இன்று உலகில் மாத்திரமல்ல எமது நாட்டில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் பரவி விடகூடாது என்பதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் எமது கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் தலைமையில் பல முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்புப்புக்களை வழங்க வேண்டும் முக்கியமாக பொது மக்கள் சமுக இடைவெளி கைகழுவுதல் போன்ற விடயங்களை முறையாக பேண வேண்டும் . கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பகுதிகளில் உள்ள சுற்றாடல் பகுதிகளில் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமிகளை அழிக்க கூடிய இரசாயன பாதார்தங்கள் தெளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
இதன் போது கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சீ. எம்.மாஹிர் இகல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ. எம்.பஸால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |