Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடமைகளில் இருந்து விலகத் தயாராகும் தாதிய உத்தியோகஸ்தர்கள்


நாட்டில் காணப்படும் அவசரமான நிலைமையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க அதிகாரிகள் தவறியுள்ளதன் காரணமாக தாதிய அதிகாரிகள் கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரச தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் சம்பந்தமாக சுகாதார அமைச்சருடன் பேச்சுவாரத்தை நடத்திய போதிலும் தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லும் வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அந்த வைரஸ் தொற்றிய நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாதியரின் சுகாதார பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால், அவர்கள் அபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் தாதிய அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது மேலும் தாமதிக்கப்பட்டால், நாளை மற்றும் நாளை மறுதினம் கடமைகளில் இருந்து விலக நேரிடும் எனவும் சமன் ரத்னபிரிய தனது அறிவிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments