Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சீனாவில் கொரோனா தொடர்பில் உண்மைகளை தெரிவித்துவந்த மூவருக்கு நடந்தது என்ன?

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நின்று விட்டதாக கூறப்படுவது உண்மையா? அல்லது உண்மையிலேயே வுஹானை தாண்டி கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும், அங்கே 76,000 பேர் குணமடைந்து விட்டார்களா? இந்த கேள்விகளுக்கு சீன அரசு, சீன ஊடகங்களை தாண்டி யாரும் உறுதியாக பதில் அளிக்கவில்லை.
வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை.
. உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் தலைநகர் பீஜிங்கில் தான் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி பீஜிங்கை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது சீன அரசு.
சீனா சொல்லும் தகவல்கள் மட்டுமே வெளி உலகுக்கு தெரியும் நிலையில், சீனா, கொரோனா வைரஸை வென்று விட்டதாக கருதி மற்ற நாடுகள், அவர்களிடம் உதவி கேட்பது அல்லது சீனாவின் பாதையில் நாமும் கட்டுப்படுத்தலாம் என நினைப்பது சரியா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Post a Comment

0 Comments