கொரோனா தொற்றாளர்களாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்காவில் தற்போது வரை கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உறுதிப்படுத்தப்பட்ட ஐவரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அவர்களில் நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments: