Home » » இன்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் இரு நாட்களிற்கு தொடர் ஊரடங்கு சட்டம்

இன்று இரவு முதல் நாடளாவிய ரீதியில் இரு நாட்களிற்கு தொடர் ஊரடங்கு சட்டம்

இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் இன்று 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |