Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா! தடுமாறும் டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1,970 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,841ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேபோன்று மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகள்,

Post a Comment

0 Comments