Home » » கொரனா இடர்காலக் கொடுப்பனவை புத்தளத்தில் வதியும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் வழங்க காதர் மஸ்தான் நடவடிக்கை.

கொரனா இடர்காலக் கொடுப்பனவை புத்தளத்தில் வதியும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் வழங்க காதர் மஸ்தான் நடவடிக்கை.


( அஸ்ஹர் இப்றாஹிம்)

நாட்டில் நிலவும் கொரனா தொற்றுக் காரணமாக பல்வேறு அசெளகரியங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு அரசினால் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கோவிட் 19 இடர்கால கொடுப்பனவான 5000 ரூபா நிதியுதவியை மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து தற்பொழுது தற்காலிகாமாக புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் வழங்குவதற்காக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ காதர் மஸ்தான் நடவடிக்கையை மேற்க் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டா மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் சமூர்த்தி ஆணையாளர் நாயகம் ஆகியோரை இன்று (22) சந்தித்து நிலைமைகளை விளக்கியதுடன் இம் மக்களுக்கும் இக் கொடுப்பனவை துரிதமாக வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்க் கொண்டுள்ளார்.

மேற்படி மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களுடன் தற்காலிகமான புத்தளத்தில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு இந் நிவாரணம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களால் தயாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இம்மக்களிடம் வினியோகிக்கப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் வாக்குப்பதிவினைக் கொண்ட 3395 குடும்பங்களும் முல்லைத்தீவில் வாக்குப்பதிவினைக் கொண்ட 280 குடும்பங்களுமாக மொத்தம் 3675 பயனாளிகள் தற்காலிகமாக புத்தளம் மாவட்டத்தில் வசித்துவரும் இத்தருணத்தில் இக் கொடுப்பனவை பெறுவதற்காக இனங்காணப்பட்டுள்ளனர்..

இது தொடர்பில் யாராவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தங்கியிருந்தால் உடனடியாக சமர்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |