Home » » இலங்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதில் சிக்கல் - அடுத்த வாரம் பாரிய சிக்கல் ஏற்படும்

இலங்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதில் சிக்கல் - அடுத்த வாரம் பாரிய சிக்கல் ஏற்படும்

சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதனை தொடர்ந்து எதிர்வரும் நாட்கள் மிகவும் ஆபத்தான மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து பல்வேறு பிரதேசங்களில் இது போன்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 27ஆம் திகதி நாட்டை திறக்க முடியாமல் போய்விடும் என சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
எனினும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாமையினால் நாள் ஒன்றுக்கு 1500 பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் தற்போதைய ஆபத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பிரிவில் உள்ள சிலரின் செயற்பாடு காரணமாக நாட்டை வழமைக்கு கொண்டுவர இருந்த வாய்ப்பு மேலும் 3 வாரங்களுக்கு தாமதமாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளர்.
மேலும் கீழ் மட்டத்தில் இருந்து கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளிகளை கட்டுபடுத்த முடியாமல் போய்விடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் நாட்டின் பல பிரதேசங்களில் கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் மேலும் சில பிரதேசங்களில் இவ்வாறு கொத்தாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவுள்ளமையினால் உடனடியாக நாடு முழுவதும் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |