Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுவரில் துளையிட்டு தப்பி ஓடிய கைதிகளுக்கு ஏற்பட்ட நிலை!!

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறிய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்தே, இந்த கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் அறையில் துளைகளையிட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த சிறைக்காவலர்கள் பொலிஸார் மற்றும் விமானப் படையினர், நீர்கொழும்பு சிறைச்சாலை அருகில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கொட்டுவை மைதானத்தில் மறைந்திருந்த இரண்டு கைதிகளையும் கைது செய்துள்ளனர்.
மற்றைய சந்தேகநபர் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் மறைந்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments