Home » » தவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. உலக சுகாதார மையத்திற்கு ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கை

தவறு செய்து விட்டீர்கள்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. உலக சுகாதார மையத்திற்கு ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கை

உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்க உள்ளது.
இந்த நிலையில் திடீரென்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார மையத்திற்கு எதிராக பேசினார். அவர் தனது பேட்டியில்,
“உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள்.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது.
இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.
ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது.
உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது.
அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டார்கள்.
சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை”,
என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார மையத்திற்கு எதிரான அவரின் இந்த பேச்சு பெரிய வைரல் ஆகியுள்ளது.
உலக சுகாதார மையம்
உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது.
எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டொலர் ஆகும்.
இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டொலர் அளித்தது.
அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டொலர் அளித்தது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |