Home » » மலையகத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி! விரைந்து வந்த அதிகாரிகள்

மலையகத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி! விரைந்து வந்த அதிகாரிகள்

கொரோனா தொற்றாளர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் டிக்கோயா பகுதியில் சுற்றித்திரிவதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலுக்கமையவே பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் நபரை நேற்று இரவு 08 மணியளவில் மீட்டுள்ளனர்.
இவர் கடவத்தை ஹியலபியன்வில பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என்றும் கொழும்பு கம்பனி வீதியில் கூலி வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து கண்டி பகுதிக்கு சென்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அட்டன் பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதுடன் அட்டன் பிரதேசத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.
குறித்த நபர் டிக்கோயா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையிலே பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாரும் பொதுசுகாதார பரிசோதகர்களும் பாதுகாப்பு ஆடைகள் அணிந்து குறித்த நபரிடன் சென்று விசாரணையை மேற்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபருக்கு இருமல் உட்பட இந் நோய்கான அறிகுறிகள் இருக்க கண்டு சந்தேகத்தின் பேரில் அவசர அம்பியூலன்ஸ் சேவையினூடாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |