Home » » வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவருக்கும் இராணுவத் தளபதியின் கண்டிப்பான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவருக்கும் இராணுவத் தளபதியின் கண்டிப்பான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.
இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உடற் கூற்று வைத்திய நிபுணர் ஆனந்த விஜேநாயக்க,
இதுவரை தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.
இனி மேல் அந்த காலத்தை நிறைவு செய்யும் அனைவரையும் விஷேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவோம்.
உட்படுத்தி கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை செய்து அது குறித்த வைத்திய அறிக்கையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |