Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்டிப்பான அறிவித்தல்!

தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம், தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்குச் சட்டத்திற்கு மதிப்பளிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்.
அவ்வாறான சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஊரமங்க நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமி எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments