ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள சுமார் 76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.
ஹட்டன் பொகவந்தலாவை மஸ்கெலியா, கொட்டகலை ,தலவாக்கலை ,பத்தனை ,டயகம , அக்கரபத்தனை உள்ளிட்ட ஹட்டன் பிரதேசத்தை உள்ளடக்கிய நகரங்களில் உள்ள மதுபானசாலைகளுக்கே இவ்வாறு காலவரையரையின்றி சீல் வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவியதனை தொடர்ந்து கடந்த 20ம் திகதி முதல் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் புதுவருடம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலினை கருத்தில் கொண்டு நிலைமை சீரடையும் வரை மதுபானங்களை மக்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வதற்காக குறித்த மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி முதல் குறித்த சீல் வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் 18 மதுபான விற்பனை நிலையங்கள் சீல் வைக்கப்பட்டதனை தொடர்ந்து மொத்தம் 76 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments