Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நாளை (21) முதல் வியாபார நடவடிக்கைகள் நடைபெறும்



(நூருள் ஹுதா உமர்)

மரக்கறி சில்லறை வியாபாரங்கள் அனைத்தும் கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நாளை (21) செவ்வாய்கிழமை நடைபெறும் என்பதோடு மொத்த வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் கல்முனை பொதுச்சந்தையில் நடைபெறும். என இன்று கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீம் தலைமையில் இடம்பெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை பொதுச் சந்தையில் வழமையாக மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட எந்தவொரு வியாபாரியும் சில்லறை வியாபாரங்கள் மேற்கொள்ள முடியாது எனவும் அங்கு தீர்மானிகப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுனன் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள், கல்முனை பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments