Home » » உலக வரலாற்றின் கடந்த 2 தசாப்தத்தில் இல்லாத கடுமையான வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய்

உலக வரலாற்றின் கடந்த 2 தசாப்தத்தில் இல்லாத கடுமையான வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய்


உலகளவில் பரவிவரும் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 15 டொலருக்குக் கீழ் சரிந்துள்ளது.
இது உலக வரலாற்றில் கடந்த 2 தசாப்த காலத்தில் காணாத கடும் வீழ்ச்சி ஆகும். அதாவது 20 வருடத்தின் பின் இவ்வாறு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
West Texas Intermediate எனும் அமெரிக்கத் தரநிலைக் குறியீட்டின் படி,
பீப்பாய் விலை சரிவு: 18.7%பீப்பாய் விலை: 14.84 டொலர்
Brent crude எனும் அனைத்துலகத் தரநிலைக் குறியீட்டின் படி,
பீப்பாய் விலை சரிவு: 1.5%பீப்பாய் விலை: 27.64 டொலர்
COVID-19 கிருமித்தொற்றால், நாடுகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.
எனவே, எண்ணெய்ச் சந்தைகள் சரிந்துள்ளன, பீப்பாய் விலை குறைந்துள்ளது.
முன்னணிக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, ரஷ்யாவுடன் விலைப் போட்டியைத் தொடங்கியதால் பிரச்சினை மோசமடைந்தது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, அன்றாட எண்ணெய் உற்பத்தியை சுமார் 10 மில்லியன் பீப்பாய் குறைக்க உற்பத்தி நாடுகள் இணங்கினாலும், எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |