Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தபால் மூல வாக்களிப்பு - விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர், அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments