Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர், விபரம் இணையதளத்தில் வெளியாகிறது!!

புதிதாக அரச சேவைகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரம் என்பன நாளை (புதன்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments