கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குகள் யாவும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் அங்கொடையில் உள்ள தேசிய தொற்று நோய் எதிர்ப்பு வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் 100 சாதாரண கட்டில்களும் 30 விசேட கட்டில்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
0 comments: